திருவாரூர், டிச.10:
திருவாரூரில் உள்ள தொன்மை சிறப்புமிக்க ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தைச் சுற்றிய பகுதிகளில், கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக தேங்கி கிடக்கும் மழைநீர் பக்தர்களுக்கும் குடியிருப்பு மக்களுக்கும் கடும் அவதியைக் ஏற்படுத்தி வருகிறது. மழைநீர் வடிய வழியின்றி இருப்பதற்கான முக்கிய காரணம், நகராட்சிக்கு சொந்தமான குளத்தின் வடிகால் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவாரூர் துர்க்காலயா சாலையிலுள்ள ஸ்ரீவிநாயகர் கோவிலை ஒட்டி நகராட்சி குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தின் வடிகால் பகுதி அப்பகுதி சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, குளத்தின் மேல்பகுதியில் உள்ள புராதன ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தைச் சுற்றிய சந்து பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது.
ஸ்ரீநளமகாராஜா பூஜித்த பண்டைய ஸ்ரீஅழகீஸ்வரர் சிவாலயம், காமாட்சியம்மன் ஆலயத்தின் பிரதான பகுதிகளில் ஒன்றாகும். இந்த சிவாலயத்தைச் சுற்றி நான்கு புறமும் மழைநீர் தேங்கி இருப்பதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் 10 நாட்களுக்கு மேலாக தேங்கி கிடப்பதால், அதன் மீது பாசி படர்ந்து, புழு பூச்சிகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இதனால் கோவிலுக்கு வரும்வர்கள், கோவிலைச் சூழ்ந்த குடியிருப்புகள் ஆகியவற்றில் துர்நாற்றம் மற்றும் நோய்தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
காமாட்சியம்மன் ஆலய சந்து பகுதிகளில் வாழும் ஏராளமான குடும்பங்கள் தினமும் இந்த தேங்கிய நீரில் நடந்து செல்வதால் தோல்வியாதி உள்ளிட்ட சுகாதார பிரச்சனைகளுக்குப் பெயர்பெற்று வருகின்றனர்.
என பக்தர்களும் அப்பகுதி குடியிருப்புவாசிகளும் வலியுறுத்துகின்றனர்.
© tamilagakural.com | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843663662

No comments:
Post a Comment